ஒரு ஆம்புலன்சில் அடைக்கப்பட்ட 22 சடலங்கள்: இது கொரோனாவின் கோரமுகம்!

ஒரு ஆம்புலன்சில் அடைக்கப்பட்ட 22 சடலங்கள்: இது கொரோனாவின் கோரமுகம்!

ஒரு ஆம்புலன்சில் அடைக்கப்பட்ட 22 சடலங்கள்: இது கொரோனாவின் கோரமுகம்!
Published on

மகாராஷ்ட்டிரா மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் 22 உடல்கள் ஒரே ஆம்புலன்சில் அடைக்கப்பட்டு மயானத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா நோய் தெற்றின் கோரமுகம் தலைவிரித்தாடி வருகிறது. மிக முக்கியமாக மகராஷ்ட்டிரா, டெல்லி போன்ற மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகம் இருக்கிறது. கொரோனா பாதிப்பால் உயிரிழப்போர் எண்ணிக்கை நாள் ஒன்றுக்கு 2000 மேல் பதிவாகிறது. இதனால் பல மாநிலங்களில் பூங்காக்கள் மயானமாக மாற்றப்பட்டு உடல்கள் எரிக்கப்பட்டு வருகிறது.

இதில் மகாராஷ்ட்டிராவின் பீட் மாவட்டத்தில் அரசு மருத்துவமனையில் உயிரிழந்த 22 கொரோனா நோயாளிகளின் உடல்களை ஒரே ஆம்பூலன்சில் மயானத்துக்கு கொண்டு செல்லப்பட்டது பலரையும் அதிர்ச்சியிலும் கவலையிலும் ஆழ்த்தியுள்ளது. இது குறித்து இறந்தவர்களின் உறவினர்கள் புகார் அளித்ததால். பீட் மாவட்டம் இது குறித்து விசாரிக்க குழு அமைத்துள்ளது. மேலும் இந்த அவலத்தை புகைப்படம், வீடியோ எடுத்தவர்களை காவல் துறையினர் மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.

பலரது செல்போன்கள் கைப்பற்றப்பட்டு பின்பு உரியவர்களிடம் கொடுக்கப்பட்டது. இது குறித்து பேசிய பீட் மாவட்டத்தின் ஆட்சியர் ரவீந்திர ஜகதாப் "இது குறித்து விசாரிக்க துணை ஆட்சியர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. விசாரணையின் முடிவில் குற்றம் இழைத்தவர்கள் தண்டிக்கப்படுவார்கள்" என தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com