Happy new year 2025
Happy new year 2025PT

Happy New Year | பிறந்தது 2025-ம் வருடம் - தமிழ்நாடு முழுவதும் உற்சாக கொண்டாட்டத்தில் மக்கள்!

Happy New Year | பிறந்தது 2025 வருடம் - தமிழ்நாடு முழுவதும் உற்சாக கொண்டாட்டத்தில் மக்கள்!
Published on

2024 ஆம் ஆண்டு பிரியா விடை பெற்று 2025 ஆம் ஆண்டு இந்தியாவிற்கு இனிமே துவங்கியுள்ளது. புத்தாண்டு பிறந்துள்ள நிலையில், மக்கள் பல்வேறு இடங்களில் கூடி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். டிஜே மூலம் பாடல்கள் ஒலிபரப்பில் ஆனந்த மகிழ்ச்சியில் மூழ்கி வருகின்றனர்.

சிலர் கோயில்களுக்கு சென்று வழிபாடு நடத்தி வருகின்றனர்.

“அனைவரிடமும் அமைதி, ஒற்றுமை, சகோதரத்துவம், மனிதநேயம் செழித்து வளர இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்” என குறித்து நடிகர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஆட்டம்... பாட்டம்... கொண்டாட்டம்...! புத்தாண்டுக்கு கலைகட்டும் திருச்சி

புத்தாண்டு கொண்டாட்டங்கள் காரணமாக கடற்கரைப் பகுதிகளில் காவல்துறை தரப்பில் கண்காணிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மக்கள் அதிக அளவில் கூடுவதால் போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரை அருகே அமைந்துள்ள காமராஜர் சாலையை மூடப்பட்டது.

8 மணி முதல் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது. இருப்பினும் 9 மணி வரை மக்கள் வீடுகளுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டது.

இதனிடையே, சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் சென்னையில் முதல் ட்ரோன் ஷோ நடைபெற்று வருகிறது. சுமார் 200 ட்ரோன்கள் மூலம் "போதைப்பொருள் இல்லா வாழ்க்கை" எனும் தலைப்பில் நடைபெறுகிறது.

சென்னையைச் சேர்ந்த ஏரோ லைட் எனும் நிறுவனத்தோடு இணைந்து சென்னை பெருநகர காவல் துறையினர் மிகப்பெரிய ட்ரோன் ஷோ நடத்துவதற்கான ஏற்பாட்டை செய்துள்ளார்கள். 200 ட்ரோன்கள் மூலமாக 15 நிமிடங்கள் ட்ரோன் ஷோ நிகழ்ச்சி நடைபெற உள்ளது. சரியாக 11:52 மணிக்கு நிகழ்ச்சி தொடங்கியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com