குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முமுகநூல்
இந்தியா
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையுடன் இன்று தொடங்கும் 2025-26 பட்ஜெட் கூட்டத்தொடர்!
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையுடன் இன்று தொடங்குகிறது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையுடன் இன்று தொடங்குகிறது.
ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் மக்களவை மற்றும் மாநிலங்களவை கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையாற்றுகிறார். குடியரசுத் தலைவரின் உரைக்கு பிறகு இரு அவைகளும் தனித்தனியாக கூடும்.
இதனையடுத்து, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பொருளாதார ஆய்வறிக்கையை தாக்கல் செய்கிறார். 2025 - 26 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் நாளை தாக்கல் செய்யப்படுகிறது. பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வு பிப்ரவரி 13ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. மார்ச் 10ஆம் தேதி தொடங்கும் இரண்டாவது அமர்வு ஏப்ரல் 4ஆம் தேதி வரை நடைபெறும். முன்னதாக, பட்ஜெட் கூட்டத்தொடரை சிறப்பாக நடத்துவது தொடர்பாக நேற்று நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.