பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணம் இல்லாத ஆண்டாக மாறிய 2020

பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணம் இல்லாத ஆண்டாக மாறிய 2020
பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணம் இல்லாத ஆண்டாக மாறிய 2020

2014-ஆம் ஆண்டு பிரதமராக பதவியேற்றது முதல், அவர் வெளிநாடு செல்லாத ஆண்டாக 2020 மாறியுள்ளது.

2014-ஆம் ஆண்டு இந்தியப் பிரதமராக மோடி பதவியேற்றார். அந்த ஆண்டின் ஜுன் 15 முதல் 2019-ஆம் ஆண்டு வரையில் பிரதமர் மோடி 96 நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். 2014 ஆம் ஆண்டு 8 நாடுகளுக்கு பயணம் மேற்கொண்ட மோடி 2015 ஆம் ஆண்டு 23 நாடுகளுக்கும், 2016 ஆம் ஆண்டு 17 நாடுகளுக்கும் அடுத்த ஆண்டுகளில் 14 நாடுகளுக்கும் பயணம் மேற்கொண்டார். 2015 இல் அவரது வெளிநாட்டுப் பயணங்களுக்கும் மட்டும் 500 கோடிக்கு மேல் செலவிடப்பட்டதாக கூறப்படுகிறது

2020-ஆம் ஆண்டு தொடக்கத்திலேயே இந்தியாவில் கொரோனா பரவல் தொடங்கியதால் அனைத்து நாடுகளுக்குமான விமானப் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. அதன் காரணமாக பிரதமர் மோடி எந்த நாட்டிற்கும் பயணம் மேற்கொள்ளவில்லை. இதன் மூலம் 2020-ஆம் ஆண்டு பிரதமருக்கு வெளிநாடு பயணம் இல்லாத ஆண்டாக மாறியுள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com