”மத்திய அரசு முடிவு செய்வதை ஏற்க முடியாது; ஜிஎஸ்டி கவுன்சிலில் விவாதிக்கணும்” - பிடிஆர்

”மத்திய அரசு முடிவு செய்வதை ஏற்க முடியாது; ஜிஎஸ்டி கவுன்சிலில் விவாதிக்கணும்” - பிடிஆர்
”மத்திய அரசு முடிவு செய்வதை ஏற்க முடியாது; ஜிஎஸ்டி கவுன்சிலில் விவாதிக்கணும்” - பிடிஆர்

2020 -21ம் ஆண்டுக்கான ஜி.எஸ்.டி 4230 கோடி ரூபாய் இன்று விடுவிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஜி.எஸ்.டி. கவுன்சிலின் 49-வது கூட்டம் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாரமன் தலைமையில், டெல்லியில் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் கலந்துகொண்ட பின்னர் தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர்,

”தமிழ்நாட்டிற்கு நிலுவையில் இருந்த 2020 -21ம் ஆண்டுக்கான ஜி.எஸ்.டி இழப்பீட்டுத் தொகை ரூ.4230 கோடியை இன்று விடிவித்துவிட்டார். அதே போல் தணிக்கை அறிக்கையின் படி 2021-22ம் ஆண்டுக்கான நிலுவைத்தொகை பாக்கி உள்ளது. மேலும், இன்றைய கூட்டம் என்பது மதுரையில் நடைபெற்றிருக்க வேண்டியது, ஆனால் குடியரசு தலைவர் வருகை உள்ளிட்ட வேறு சில நிகழ்வுகள் காரணமாக இந்த ஜி்எஸ்.டி கவுன்சில் கூட்டத்தை டெல்லியிலேயே நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று இன்று டெல்லி விஞ்ஞான் பவனில் கூட்டம் நடைபெற்றது” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், ” மேல் முறையீட்டு தீர்ப்பாயம் மாநில அளவில் அமைக்கப்பட வேண்டும் என்று தமிழ்நாடு உள்ளிட்ட 13 மாநிலங்கள் கோரிக்கை வைத்ததால் அதன் மீது முடிவு எடுக்கப்படவில்லை. குறிப்பாக இந்த தீர்ப்பாயம் அமைக்கும்பட்சத்தில் உறுப்பினர்கள் நியமிப்பதில் மாநிலங்களுக்கு கூடுதல் உரிமை வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தினோம். மேலும், ஒரே தேசம், ஒரே வரி என்பது ஒரு முழக்கத்துக்காக தான் இருக்குமே தவிர அதனை ஒருபோதும் செயல்படுத்த இயலாது. ஏனெனில் கூட்டாட்சி தத்துவத்தில் மாநிலங்களின் உரிமைகள் காப்பாற்றப்படும் என்ற நம்பிக்கை இருந்தால்தான் அது சாத்தியமாகும் ” என்று கூறினார்.

மேலும்,” ஜி.எஸ்.டி இழப்பை நீட்டிப்பது தொடர்பாக ஜி.எஸ்.டி இதுவரை எந்த தகவலும் இல்லை. மேலும் கூட்டாட்சி தத்துவமுறையில் ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம் நடைபெறுவதாக இருந்தால், ஜி.எஸ்.டி இழப்பீடு நீட்டிப்பு தொடர்பாக கவுன்சில் கூட்டத்தில் விவாதிக்க வேண்டுமே தவிர, நிதி அமைச்சகமும், பிரதமரும் முடிவு செய்வதை ஏற்க முடியாது, அது ஜனாயக நடைமுறை அல்ல. அதேபோல கூட்டாட்சி தத்துவத்தின்படி ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம் நடைபெறுவதில்லை. அப்படி நடைபெறுவதாக இருந்தால் ஜி.எஸ்.டி இழப்பீடு தொடர்பாகவும் கவுன்சில் கூட்டத்தில் விவாதிக்க அனுமதித்திருப்பார்கள். அது தனியாக விவாதிக்கப்படும் என்று கூறியிருக்கக்கூடாது” என பழனிவேல் தியாகராஜன் கூறினர்.

மேலும் பேசிய அவர், அடுத்த ஜி.எஸ்.டி கவுன்சில் குழு  கூட்டம் மதுரையில் நடைபெறும். அதற்கு முன்னதாக ஜி.எஸ்.டி பிரச்னைகள் தொடர்பாக பல்வேறு கோரிக்கைகளை ஒரு மனுவாக தயாரித்து மத்திய நிதி அமைச்சர், மத்திய நிதி செயலாளருக்கு உள்ளிட்டோருக்கு வழங்க இருக்கின்றேன்” என அவர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com