\
நேபாளத்தில் ஆன்மீக சுற்றுலா : 200 இந்தியர்கள் சிக்கித் தவிப்பு

நேபாளத்தில் ஆன்மீக சுற்றுலா : 200 இந்தியர்கள் சிக்கித் தவிப்பு

நேபாளத்தில் ஆன்மீக சுற்றுலா : 200 இந்தியர்கள் சிக்கித் தவிப்பு
Published on

நேபாளத்துக்கு ஆன்மீகச் சுற்றுலா சென்ற 200 இந்தியர்கள் மோசமான வானிலை காரணமாக அங்கிருந்து வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர். 

நேபாளத்தின் சிமிகாட் என்ற இடத்துக்கு இந்தியாவின் பல மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் ஆன்மீக சுற்றுலா சென்றுள்ளனர். அங்கு தற்போது கனமழை பெய்து வருவதால், மோசமான வானிலை நிலவி வருகிறது. அத்துடன் விமானம் இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் நாடு திரும்ப முடியாமல் 200 இந்தியர் சிக்கித்தவிக்கின்றனர். 

சுற்றுலா வந்த இந்தியர்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை எனவும், அவர்கள் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் நேபாளத்தில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும், வானிலை சீரானவுடன் அனைவரும் பத்திரமாக இந்தியாவுக்கு அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com