ஜம்மு காஷ்மீர் மாநிலம் பாராமுல்லா மாவட்டத்தில் உள்ள ஒரு சிறையில் சுமார் 20 செல்ஃபோன்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பாராமுல்லா மாவட்டத்தில் உள்ள ஒரு சிறையில் சிறைத்துறை அதிகாரிகள் திடீரென சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையின்போது, சிறையில் இருக்கும் கைதிகள் சிலர் மொபைல் ஃபோன்களை பயன்படுத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த கைதிகள் பயன்படுத்திய சுமார் 20 செல்போன்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார், சிறையில் எப்படி செல்ஃபோன்கள் வந்தது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.