பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து கோர விபத்து - 20க்கும் மேற்பட்டோர் பலி
சிம்லா அருகே தனியார் பேருந்து ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 20க்கும் மேற்பட்டோர் பலியாகினர். இதையடுத்து அங்கு மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
ஹிமாச்சலப் பிரதேச மாநிலம் சிம்லா அருகே உள்ள கின்னோரிலிருந்து சோலான் என்ற பகுதிக்கு தனியார் பேருந்து ஒன்று சுமார் 40 பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்றுகொண்டிருந்தது. இந்தப் பேருந்து ராம்பூர் அருகே வந்தபோது, திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், 20க்கும் மேற்பட்டோர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறை மற்றும் தீயணைப்புப் படையினர் மீட்புப் பணிகளை மேற்கொண்டனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.