ஊரடங்கை மீறினால் 2 ஆண்டுகள் சிறை : மத்திய அரசு எச்சரிக்கை
ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் மற்றும் வதந்தி பரப்புவர்களுக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஊரடங்கு மற்றும் வதந்திகள் பரப்புவது தொடர்பான சுற்றறிக்கை அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை சேர்ந்த தலைமை செயலாளர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக மத்திய உள்துறைச் செயலாளர் அஜய் பல்லா தெரிவித்துள்ளார்.
அதில் ஊரடங்கை மீறுபவர்கள் மற்றும் வதந்தி பரப்புவோர் மீது இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் பேரிடர் மேலாண்மைச் சட்டங்களின் கீழ் வழக்குப்பதிவு செய்து இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையுடன், அபராதமும் விதிக்கப்படும் என கூறியுள்ளார்.
மேலும், ஊரடங்கு நேரத்தில் பண மோசடி, பொருட்களை சேதப்படுத்துதல் ஆகிய குற்றங்களுக்கும் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என மத்திய உள்துறைச் செயலாளர் அஜய் பல்லா எச்சரிக்கை விடுத்துள்ளார்.