\
உ.பி: மனைவியுடன் சண்டை - தந்தை உதைத்ததில் 2 வயது குழந்தை மரணம்

உ.பி: மனைவியுடன் சண்டை - தந்தை உதைத்ததில் 2 வயது குழந்தை மரணம்

உ.பி: மனைவியுடன் சண்டை - தந்தை உதைத்ததில் 2 வயது குழந்தை மரணம்
Published on: 

உத்தரப் பிரதேச மாநிலம் ஃபிரோசாபாத்தில் மனைவியுடன் ஏற்பட்ட சண்டையின்போது, தந்தை உதைத்ததில் 2 வயது பெண் குழந்தை உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உயிரிழந்த குழந்தையின் உடலை அவசரமாக அடக்கம் செய்ய குடும்பத்தினர் ஏற்பாடு செய்து கொண்டிருந்த நிலையில், ஃபிரோசாபாத் கிராமத்தில் உள்ள சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

2 வயது பெண் குழந்தை ஆயத்தின் தந்தை ஷாநவாசுக்கும் அவரது தாயாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டபோது, அவர் உதைத்ததில் அந்த குழந்தைக்கு பலத்த காயம் ஏற்பட்டதாக அவரது தாத்தா சர்ப்ராஸ் போலீஸ் புகாரில் தெரிவித்துள்ளார். அதன்பின்னர் மருத்துவமனைக்கு கொண்டுசென்றபோது குழந்தை ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக கக்ரோலி காவல் நிலையத்தில் குழந்தையின் தந்தை ஷாநவாஸ் மீது இந்திய தண்டனைச் சட்டம் 304 கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com