இமாச்சல பிரதேசம்: நடுவானில் நின்ற ரோப் கார் - பதைபதைக்கும் வீடியோ

இமாச்சல பிரதேசம்: நடுவானில் நின்ற ரோப் கார் - பதைபதைக்கும் வீடியோ
இமாச்சல பிரதேசம்: நடுவானில் நின்ற ரோப் கார் - பதைபதைக்கும் வீடியோ

இமாச்சல பிரதேசத்தில் தொழில்நுட்பக்கோளாறு காரணமாக நடுவானில் கேபிள் கார் நின்றதில் 11 சுற்றுலாப் பயணிகள் சிக்கிக் கொண்டனர்.

இமாச்சல பிரதேசத்தில் உள்ள பிரபல சுற்றுலா தலங்களில் ஒன்று பர்வானூ. இப்பகுதியில் சுற்றுலாப்பயணிகளின் வசதிக்காக கேபிள் கார் சேவை செயல்படுகிறது. இந்நிலையில், இன்று மதியம் 1.30 மணியளவில் இந்த கேபிள் காரில் 11 சுற்றுலாப்பயணிகள் சென்றுள்ளனர். அப்போது கேபிள் கார் திடீரென பல நூறு அடி உயரத்தில் தொழில்நுட்பக்கோளாறு காரணமாக நடுவழியில் 2 மணிநேரம் நின்றது.

இதையடுத்து பர்வானூ போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதனடிப்படையில் போலீசார் மாநில பேரிடர் மீட்புக்குழுவினருடன் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன்படி, கயிறு கட்டி கேபிள் காரில் இருந்து ஒவ்வொருவராக கீழே இறக்கி கொண்டு வரப்படுகின்றனர். இதுவரை 9 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும் மீதமுள்ள இருவரை மீட்கும் பணி நடந்து வருகிறது எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர். மீட்கப்பட்ட பயணிகள் அனைவரும் நலமுடன் உள்ளனர் என்றும் நடுவானில் கேபிள் காரில் சிக்கித் தவிக்கும் இருவரின் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் மீட்புப்பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளது எனவும் தேவை ஏற்பட்டால் தேசியப் பேரிடர் மீட்புக் குழவினர் வரவழைக்கப்படுவார்கள் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதே ரோப்வேயில் கடந்த 1992 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ரோப் கார் ஒன்றின் கேபிள் அறுந்ததும் 11 பயணிகளை கொண்ட ரோப் கார் நடுவானில் நின்றது. விமானப்படை குழுவினர் மூலம் இந்த விபத்தில் மாட்டிக்கொண்ட பயணிகளை கடும் போராட்டத்திற்கு பின்பு மீட்டனர். இந்தாண்டு ஏப்ரம் மாதம் இதோ போன்று ஜார்க்காண்டில் ரோப் காரில் நடுவானில் நின்றதில்  சிக்கியவர்களை 40 மணி நேர போராட்டத்திற்கு பிறகு மீட்டப்பட்டனர். இவ்விபத்தில் 3 பேர் இறந்தனர்.  

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com