குஜராத் - வேனிலிருந்து தவறிவிழுந்த மாணவிகள்
குஜராத் - வேனிலிருந்து தவறிவிழுந்த மாணவிகள்முகநூல்

குஜராத் | பள்ளி வேனில் இருந்து தவறி விழுந்த மாணவிகள் - அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சி

குஜராத்தில் பள்ளி வேன் ஒன்றில் இருந்து மாணவிகள் கீழே விழுந்த காட்சிகள் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன.
Published on

குஜராத்தில் வதோதரா மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளிக்கு சொந்தமான வேன் ஒன்று, மாணவர்களை ஏற்றிக்கொண்டு சென்றுள்ளது. அப்போது எதிர்பாராதவிதமாக, வேனின் பின்புற கதவு திறந்ததில், அதிலிருந்த இரண்டு மாணவிகள் சாலையின் நடுவே விழுந்துள்ளனர்.

வேனிலிருந்து தவறிவிழுந்த மாணவிகள்
வேனிலிருந்து தவறிவிழுந்த மாணவிகள்

இதில் இருவரும் காயமடைந்தனர். தொடர்ந்து, அப்பகுதி மக்கள் மாணவிகளை மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்தனர். இந்த காட்சிகள், அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளன.

குஜராத் - வேனிலிருந்து தவறிவிழுந்த மாணவிகள்
மத்திய பிரதேசம்| கூட்டுப் பாலியல் வன்கொடுமை.. தப்பிக்க அரை நிர்வாணமாய் ஒன்றரை கி.மீ. ஓடிய இளம்பெண்!

பின்பக்க கதவு சரியாக மூடப்படாத காரணத்தால், மாணவிகள் வெளியே தவறி விழுந்துள்ளதாக தெரிகிறது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com