சிபிஎஸ்இ பள்ளி
சிபிஎஸ்இ பள்ளிமுகநூல்

சிபிஎஸ்இ மாணவர்களுக்கு ஆண்டுக்கு 2 பொதுத்தேர்வு.. மத்திய கல்வி அமைச்சர் ஆலோசனை

சிபிஎஸ்இ மாணவர்களுக்கு ஆண்டுக்கு 2 முறை பொதுத்தேர்வு நடத்துவது தொடர்பாக மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஆலோசனை. வரைவு விதிமுறைகள் விரைவில் வெளியிடப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
Published on

செய்தியாளர் - ராஜீவ்

சிபிஎஸ்இ மாணவர்களுக்கு ஆண்டுக்கு 2 முறை பொதுத்தேர்வு நடத்துவது தொடர்பாக மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஆலோசனை. வரைவு விதிமுறைகள் விரைவில் வெளியிடப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

2026-27 கல்வியாண்டிலிருந்து வருடத்திற்கு இரண்டு முறை சிபிஎஸ்இ தேர்வு முறை அமலுக்கு வரும் என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்திருந்த நிலையில், டெல்லியில் இன்று பள்ளிக் கல்விச்செயலாளர், சிபிஎஸ்இ தலைவர் மற்றும் சிபிஎஸ்இயின் பிற அதிகாரிகளுடன் மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஆலோசனை நடத்தினார். இதில், ஆண்டுக்கு இரண்டு முறை சிபிஎஸ்இ தேர்வுகளை நடத்துதல் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

சிபிஎஸ்இ பள்ளி
இந்தியாவில் தடம் பதிக்கிறதா எலான் மஸ்க்கின் டெஸ்லா நிறுவனம்? பின்னணி என்ன?

மாணவர்களுக்கு மன அழுத்தமில்லாத கற்றல் சூழலை உருவாக்குவது அரசாங்கத்தின் முக்கிய கவனம் செலுத்தும் ஒரு படியாகும் என்று தெரிவித்த மத்திய அமைச்சர், தேர்வு மேம்பாடு மற்றும் சீர்திருத்தத்தை நோக்கிய ஒரு முக்கிய படியாக இது அமையும் என்று தெரிவித்தார்.

cbse results
cbse resultspt web

மேலும் இந்த விவாதங்களின் வரைவு திட்டம் விரைவில் சிபிஎஸ்இ-யால் பொதுவெளியில் வெளியிடப்படும் என்றும் தெரிவித்தார். இந்த சீர்திருத்தம் தேசிய கல்விக் கொள்கையின் முக்கிய விதிகளை செயல்படுத்துவதில் மற்றொரு முக்கியமான படியாகும் எனவும் மாணவர்களிடையே தேர்வு தொடர்பான மன அழுத்தத்தைக் குறைக்க இது உதவும் என்றும் தெரிவித்துள்ளார்.

சிபிஎஸ்இ பள்ளி
தி.மலை | "எங்களை ஒன்றும் செய்ய முடியாது" - பட்டியலின விவசாயிகளின் பயிர்கள் அழிக்கப்பட்ட கொடூரம்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com