இந்தியா
சிறப்பு அந்தஸ்து ரத்துக்கு பின் ஜம்மு காஷ்மீரில் 2 பேர் சொத்துகள் வாங்கியுள்ளனர்: அரசு
சிறப்பு அந்தஸ்து ரத்துக்கு பின் ஜம்மு காஷ்மீரில் 2 பேர் சொத்துகள் வாங்கியுள்ளனர்: அரசு
ஜம்மு - காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட பின், அங்கு இரண்டு பேர் சொத்துகள் வாங்கியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் ஐந்தாம் தேதி சிறப்பு அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டது. அதன் மூலம், ஜம்மு - காஷ்மீரில் பிற மாநிலத்தவர் நிலங்களையும் சொத்துகளையும் வாங்க முடியாது என்ற நிலை மாற்றப்பட்டது. அந்த வகையில் ஜம்மு - காஷ்மீரில் சொத்துகளை வாங்கியிருப்போர் விவரங்கள் குறித்து தமிழக எம்பிக்கள் ராமலிங்கம், கணேசமூர்த்தி ஆகியோர் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த மத்திய உள்துறை அமைச்சகம், 2019 ஆகஸ்ட் ஐந்தாம் தேதிக்கு பின் இரண்டு பேர் இரண்டு சொத்துக்களை ஜம்மு காஷ்மீரில் வாங்கியுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.