கர்நாடகா: ஆக்சிஜன் பற்றாக்குறையால் மேலும் 2 பேர் உயிரிழப்பு

கர்நாடகா: ஆக்சிஜன் பற்றாக்குறையால் மேலும் 2 பேர் உயிரிழப்பு
கர்நாடகா: ஆக்சிஜன் பற்றாக்குறையால் மேலும் 2  பேர் உயிரிழப்பு

ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக பெங்களூரில் மேலும் 2 பேர் உயிரிழந்தனர்.

கர்நாடகா பெங்களூர் யலங்காவில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் 2 பேர் உயிரிழந்துள்ளனர். முன்னதாக, நேற்று கர்நாடக மாநிலம் சாமராஜநகர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறை மற்றும் இதர காரணங்களால் கொரோனா நோயாளிகள் உட்பட 24 பேர் உயிரிழந்தனர். இந்த நிலையில் தற்போதும் ஆக்சிஜன் பற்றாக்குறையால் மேலும் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.

பெங்களூரில் நேற்று 21,199 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கபட்ட நிலையில் சிகிச்சைப்பலன்றி 64 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது வரை 7,97,292 நபர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், 6,601 நபர்கள் உயிரிழந்துள்ளனர். இதில் 2,81,767 நபர்கள் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com