உபியில் மாட்டிறைச்சி வைத்திருந்ததாக சிறுமிகள் உட்பட 10 பேர் கைது
உத்தரப் பிரதேசத்தில் மாட்டிறைச்சி வைத்திருந்ததாக சிறுமிகள் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
உத்தரப் பிரதேசம் முசாபர் நகரை சேர்ந்த நசிமுதீன் என்பவரது வீட்டில் காவல்துறையினர் திடீரென சோதனை நடத்தினர். அங்கிருந்து 1000 கிலோ மாட்டிறைச்சி மற்றும் கசாப்புக்கு பயன்படுத்தும் அரிவாள், கத்தி உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். இறைச்சிக்காக பசுக்களை கொன்றதாக கூறி நசிமுதீன், அவரது மனைவி மற்றும் 12 வயது மற்றும் 16 வயது மகள்கள் உள்ளிட்ட மொத்தம் 6 பேரை கைது செய்தனர்
கைது செய்யப்பட்டவர்களில் நசிமுதீனின் மகள்கள் சிறுமிகள் என்பதால் அவர்கள் சிறுவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அதை தொடர்ந்து 2 பேரும் சிறுவர்கள் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டனர். நசிமுதீன் மனைவி உள்பட 7 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இறைச்சிக்காக பசுக்களை கொன்றதாக நசிமுதீன் மீது ஏற்கனவே பல வழக்குகள் உள்ளன.
இச்சம்பவத்திலும் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வீட்டில் காவல்துறையினர் சோதனை நடத்திய போது தலைமறைவாகி இருந்த நசிமுதீன் பின்னர் கைது செய்யப்பட்டார். இதையடுத்து நசிமுதீன் உறவினர்களும், அக்கம்பக்கத்தினரும் காவல்துறையினருக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர்.