ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகள் இருவர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக வந்த தகவலை அடுத்து, பாதுகாப்பு படையினர் அங்கு தேடுதல் வேட்டையில் நள்ளிரவில் ஈடுபட்டனர். வானிபுரா பகுதியில் நடந்த சோதனையின்போது, பயங்கரவாதிகள் ராணுவத்தினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதையடுத்து பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடைபெற்றது. அதில் பயங்கரவாதிகள் இருவர் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்கள் உடலையும் ஆயுதங்களையும் பாதுகாப்புப் படையினர் கைபற்றினர். அங்கு மேலும் ஒரு பயங்கரவாதி உயிருடன் உள்ளதால் தொடந்து சண்டை நீடித்துவருகிறது.

