ஓசூர் | அழுகிய நிலையில் பெண்ணின் கால்கள் மட்டும் மீட்பு... அதிர்ச்சியடைந்த போலீஸ்!

ஓசூரில் இளம்பெண் ஒருவரின் இரு கால்களை தனித்தனியாக அழுகிய நிலையில் போலீசார் மீட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சோதனை செய்யும் அதிகாரிகள்
சோதனை செய்யும் அதிகாரிகள் PT WEB

செய்தியாளர் - ம.ஜெகன்நாத் 

கர்நாடக மாநிலம் எல்லைப் பகுதியான ஆனேகல் அருகே உள்ள , முனிமாராயானடோடி ஏரி பகுதியில் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில், அடையாளம் தெரியாத பெண்ணின் இரண்டு கால்கள் அழுகிய நிலையில் கிடந்துள்ளன. இதை அந்தப் பகுதியில் காலைக் கடன் கழிக்கச் சென்றவர்கள் பார்த்து விட்டு, காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள், மோப்பநாய் உதவியுடன் ஆய்வு செய்தனர். மேலும் அந்த பகுதியில் வேறு ஏதாவது உடல் பாகங்கள் உள்ளதா என்பது குறித்து சோதனை செய்தனர். பின்னர் அழுகிய நிலையில் இருந்த இரண்டு கால்களையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

முன்னதாக கடந்த 15 நாட்களுக்கு முன்பு இதே பகுதியில் அடையாளம் தெரியாத பெண்ணின் இரண்டு கைகள் கண்டெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதுபற்றி தற்போதுவரை எந்த தகவலும் கிடைக்காத நிலையில், அடுத்தகட்டமாக இரண்டு கால்கள் மீட்கப்பட்டது போலீசார் மத்தியில் அதிர்ச்சியையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

சோதனை செய்யும் அதிகாரிகள்
23 வகையான நாய்களுக்குத் தடை விதித்த மத்திய அரசு; பதாகைகளுடன் களமிறக்கப்பட்ட நாய்கள்!

இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஏரியில் 15 நாட்கள் இடைவெளியில் அடுத்தடுத்து, பெண்ணின் கை, கால்கள் கிடைத்துள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com