இந்தியா
பேரணிக்காக தயார் நிலையில் 2 லட்சம் டிராக்டர்கள்: குவியும் தமிழக விவசாயிகள்!
பேரணிக்காக தயார் நிலையில் 2 லட்சம் டிராக்டர்கள்: குவியும் தமிழக விவசாயிகள்!
குடியரசு தின விழாவில் டிராக்டர் பேரணியில் கலந்து கொள்வதற்காக தமிழகத்தைச் சேர்ந்த விவசாயிகளும் டெல்லியில் குவிந்து வருகின்றனர். வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி, பேரணிக்காக தயார் நிலையில் 2 லட்சம் டிராக்டர்கள் உள்ளன.
காசிப்பூரில் 2 கி.மீ., தொலைவுக்கு அணிவகுத்துள்ளன. தமிழக விவசாயிகள் ஏராளமானோர் பேரணியில் கலந்து கொள்ள வருகை தந்துள்ளனர். அசம்பாவிதங்களை தடுப்பதற்காக காவல்துறையினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மத்திய அரசுக்கு அழுத்தம் தரும் நோக்கில் இந்த டிராக்டர் பேரணி நடத்தப்படுகிறது.