\
சபரிமலையில் தரிசனம் செய்த கேரள பெண்களுக்கு 24 மணி நேர பாதுகாப்பு: உச்சநீதிமன்றம் உத்தரவு!

சபரிமலையில் தரிசனம் செய்த கேரள பெண்களுக்கு 24 மணி நேர பாதுகாப்பு: உச்சநீதிமன்றம் உத்தரவு!

சபரிமலையில் தரிசனம் செய்த கேரள பெண்களுக்கு 24 மணி நேர பாதுகாப்பு: உச்சநீதிமன்றம் உத்தரவு!
Published on

சபரிமலை ஐயப்பன் கோயிலில் சாமி தரிசனம் செய்த கனகதுர்கா, பிந்து ஆகியோருக்கு 24 மணி நேர பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களும் தரிசனம் செய்ய உச்சநீதிமன்றம் அனுமதி அளித்ததற்கு எதிர்ப்புத் தெரிவித்து கேரளாவில் போராட்டங்கள் நடந்து வந்தன. இந்நிலையில் அம்மாநிலத்தைச் சேர்ந்த கனகதுர்கா (44), பிந்து (42) ஆகிய பெண்கள் பலத்த பாதுகாப்புடன் சபரிமலையில் சாமி தரிசனம் செய்தனர். இருவரும் 50 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் என்பதால் இது பரபரப்பை ஏற்படுத்தியது. பாதுகாப்பு கருதி போலீசார், இவர்களை வீட்டுக்கு அனுப்பாமல் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர்.

இந்நிலையில் கனகதுர்கா மலப்புரம், பெரிந்தலமன்னாவில் உள்ள தனது கணவரின் வீட்டுக்கு செவ்வாய்க்கிழமை சென்றார். அப்போது சபரி மலை சென்றது தொடர்பாக கனகதுர்காவுக்கும், அவர் மாமியாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் கனகதுர்காவை அவரது மாமியார் சுமதியம்மா சரமாரியாகத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் அவர் பலத்த காயம் அடைந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் மாமியார் மீது போலீஸில் புகார் செய்தார். 

இந்நிலையில் தன்னை கனகதுர்கா தாக்கியதாகக் கூறி மாமியாரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கனகதுர்கா மீது அவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் கனகதுர்காவும் பிந்துவும் தங்கள் உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் 24 மணி நேர பாதுகாப்பு வேண்டும் என்றும் கூறி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

இவர்களின் சார்பில் மூத்த வழக்கறிஞர் இந்தியா ஜெய்சிங் இந்த மனுவைத் தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை இன்று விசார ணைக்கு வந்தது.

விசாரித்த நீதிமன்றம், அவர்களுக்கு 24 மணி நேர போலீஸ் பாதுகாப்பை கேரள அரசு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது. 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com