மத்தியப்பிரதேசத்தில் 2 சிறுமிகள் மீது மூர்க்கத்தனமான தாக்குதல்: போலீசார் விசாரணை

மத்தியப்பிரதேசத்தில் 2 சிறுமிகள் மீது மூர்க்கத்தனமான தாக்குதல்: போலீசார் விசாரணை
மத்தியப்பிரதேசத்தில் 2 சிறுமிகள் மீது மூர்க்கத்தனமான தாக்குதல்: போலீசார் விசாரணை

மத்தியப்பிரதேசத்தில் இரண்டு சிறுமிகள் தங்களது தாய்மாமனின் மகனுடன் தொலைபேசியில் பேசியதற்காக அவர்களது குடும்பத்தினராலும் ஊர் மக்களாலும் சரமாரியாக தாக்கப்பட்டது தொடர்பான காட்சிகள் வெளியாகி உள்ளன.

தார் மாவட்டத்தில் நிகழ்ந்த இந்தச் சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கம்புகளைக் கொண்டு தாக்குவது, காலால் எட்டி உதைப்பது மற்றும் தலைமுடியைப் பிடித்து தரதரவென இழுத்துச் சென்று கண்மூடித்தனமாக தாக்கும் காட்சிகள் அதில் இடம்பெற்றுள்ளன. அந்தச் சிறுமிகளின் தாயாரும் அவர்களை காலணியால் அடித்து தாக்குகின்றார். கடந்த மாதம் 22ஆம் தேதி நடந்ததாகக் கூறப்படும் இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர், 7 பேரை கைதுசெய்து விசாரித்து வருகின்றனர். மத்தியப்பிரதேசத்தில் இதற்கு முன்னர் ஒரு பெண்ணை அவரது குடும்பத்தினர் மரத்தில் கட்டித் தொங்கவிட்டு கண்மூடித்தனமாக தாக்கிய சம்பவம் ஏற்படுத்திய தாக்கம் நீங்குவதற்குள் அதேமாதிரியான மற்றொரு சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com