கூகுள் மேப்பை பார்த்து காரை ஓட்டியதால் விபரீதம்; ஆற்றில் மூழ்கிய கார்.. 2 மருத்துவர்கள் உயிரிழப்பு

கேரளாவில் கூகுள் மேப்பை பார்த்து காரை ஓட்டிச் சென்ற போது சாலை என நினைத்து ஆற்றில் காரை விட்டதால் நீரில் மூழ்கி மருத்துவர்கள் இரண்டு பேர் உயிரிழந்தனர்.

கேரள மாநிலம் கொல்லத்தைச் சேர்ந்த மருத்துவர் அத்வைக், கொடுங்கநல்லூரைச் சேர்ந்த அஜ்மல் ஆகியோர் கொடுங்கநல்லூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வந்தனர். இவர்களது நண்பர்களான மருத்துவ மாணவி செவிலியர் உட்பட 3 பேருடன் அத்வைதிக்கின் பிறந்த நாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின் வீடு திரும்பியுள்ளனர்.

அப்போது பறவூரில் இருந்து கொடுங்கநல்லூருக்கு காரில் கூகுள் மேப் உதவியுடன் அவர்கள் சென்றதாக கூறப்படுகிறது. எர்ணாகுளம் அருகே நள்ளிரவில் வந்தபோது சாலையில் தண்ணீர் தேங்கியுள்ளது என நினைத்து ஆற்றிற்குள் காரை ஓட்டியுள்ளனர்.

இதில் கார் ஆற்றுக்குள் மூழ்கியது. 5 பேரும் உயிருக்கு போராடிய நிலையில் அவ்வழியாக சென்றவர்கள் அளித்த தகவலின் பேரில் தீயணைப்புத் துறையினர் மீட்புப் பணிகளை மேற்கொண்டனர். காரில் பின் இருக்கையில் இருந்த மூவர் உயிர்தப்பிய நிலையில் முன் இருக்கையில் இருந்த மருத்துவர்கள் அத்வைக், அஜ்மல் ஆகியோர் கதவைத் திறக்க முடியாமல் நீரில் மூழ்கியுள்ளனர்.

கூகுள் மேப் விபரீதம்
கூகுள் மேப் விபரீதம்புதிய தலைமுறை
கூகுள் மேப் விபரீதம்
அப்பாவுக்காக காத்திருந்த குழந்தை.. கூகுள் மேப் காட்டிய பாதையில் சென்றவருக்கு நேர்ந்த சோகம்!

சம்பவத்தின் போது மழை பெய்து ஆங்காங்கு தண்ணீர் இல்லாததாலும் மின்சாரம் இல்லாததாலும் சாலை சரியாக தெரியாமல் பாதை மாறி காரை ஆற்றுக்குள் செலுத்தியது விசாரணையில் தெரிய வந்தது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com