மும்பையில் இரண்டு வயது குழந்தையை கொன்ற சிறுத்தைகள்.. கூண்டுக்குள் சிக்கியது!

மும்பையில் இரண்டு வயது குழந்தையை கொன்ற சிறுத்தைகள்.. கூண்டுக்குள் சிக்கியது!

மும்பையில் இரண்டு வயது குழந்தையை கொன்ற சிறுத்தைகள்.. கூண்டுக்குள் சிக்கியது!
Published on

மகாராஷ்டிர தலைநகர் மும்பையின் ஆரே காலனி பகுதியில் வைக்கப்பட்டிருந்த கூண்டுகளில் இரண்டு சிறுத்தைகள் சிக்கின. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 4 சிறுத்தைகள் பிடிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆரே காலனி பகுதியில் மனித - விலங்கு மோதல்கள் அண்மைகாலமாக அதிகரித்து வரும் நிலையில் சிறுத்தைகளை பிடிக்கக் கூண்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. இரண்டு சிறுத்தைகளும் மருத்துவ ஆய்வுக்காக சஞ்சய் காந்தி தேசிய பூங்காவிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அதிகாரிகள் மனிதர்கள் மீது தாக்குதல் நடத்திய சிறுத்தை அடையாளம் காணப்பட்டு வனவிலங்கு பூங்காவிலேயே பராமரிக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

மற்றொரு விலங்கு மீண்டும் வனத்துக்குள் விடப்படும் எனவும் வனத்துறையினர் தெரிவித்தனர். சிறுத்தை தாக்கியதில் இரண்டு வயது குழந்தை ஒன்று உயிரிழந்ததையடுத்து சிறுத்தையை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com