மத்தியப் பிரதேசம்: வெள்ளம் காரணமாக அடித்துச் செல்லப்பட்ட 2 பாலங்கள்; அதிர்ச்சி வீடியோ

மத்தியப் பிரதேசம்: வெள்ளம் காரணமாக அடித்துச் செல்லப்பட்ட 2 பாலங்கள்; அதிர்ச்சி வீடியோ
மத்தியப் பிரதேசம்: வெள்ளம் காரணமாக அடித்துச் செல்லப்பட்ட  2 பாலங்கள்; அதிர்ச்சி வீடியோ

மத்தியப் பிரதேசத்தின் தாடியா மாவட்டத்தில் வெள்ளம் காரணமாக அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டதால், சிந்து ஆற்றின் இரண்டு பாலங்கள் அடித்துச் செல்லப்பட்டன.

மத்தியப் பிரதேசத்தில் தாடியா நகரில் ரத்தன்கர் கோயிலுக்கு அருகில் உள்ள சிந்து ஆற்றில் பாய்ந்தோடும் வெள்ளம் காரணமாக  பாலம் அடித்து செல்லப்படும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. சிந்து ஆற்றின் நீர்மட்டம் உயர்ந்துள்ளதால், சிவபுரி மாவட்டத்தில் அடல் சாகர் அணையின் 10 கதவுகள் அதிகாலையில் திறக்கப்பட்டதாக முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்தார்.

இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், என்டிஆர்எஃப் மற்றும் எஸ்டிஆர்எஃப் குழுக்கள் 1,600 பேரை வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் இருந்து காப்பாற்றியுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. "குவாலியர்-சம்பல் பகுதியில் 1,171 கிராமங்கள் அதிக மழை காரணமாக பாதிக்கப்பட்டுள்ளன, குறிப்பாக சிவபுரி மற்றும் ஷியோப்பூர் மாவட்டத்தில் முன்னெப்போதும் இல்லாத வகையில் 24 மணி நேரத்தில் 800 மிமீ மழை பெய்ததால் இந்த வெள்ளம் ஏற்பட்டது" என்று முதல்வர் குறிப்பிட்டார் .

சிவ்புரி, ஷியோப்பூர், குவாலியர் மற்றும் தாடியா மாவட்டங்களில் மீட்புப் பணிகளுக்காக ராணுவம் வரவழைக்கப்பட்டுள்ளது என்று மாநில கூடுதல் தலைமைச் செயலாளர் ராஜேஷ் ராஜோரா கூறினார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com