இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 2.81 லட்சம் பேருக்கு கொரோனா

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 2.81 லட்சம் பேருக்கு கொரோனா

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 2.81 லட்சம் பேருக்கு கொரோனா
Published on

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 2,81,386 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு 2,46,84,077லிருந்து 2,49,65,463ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

ஒரேநாளில் 1,01,461 பேர் கொரோனா சிகிச்சைக்கு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். சிகிச்சைக்கு அனுமதிக்கப்படுவோர் எண்ணிக்கை 55,344 லிருந்து 1,01,461ஆக அதிகரித்துள்ளது. அதேசமயம் நாடு முழுவதும் கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 35,16,997 லட்சமாக குறைந்துள்ளது.

இந்தியாவில் ஒரேநாளில் 3,78,741 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 2,07,95,335லிருந்து 2,11,74,076ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தோர் விகிதம் 84.25%ஆக உள்ளது.

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 4,106 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,70,284லிருந்து 2,74,390ஆக உயர்ந்துள்ளது. உயிரிழப்பு விகிதம் 1.09%ஆக உள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com