கர்நாடக தேர்தல்: மொத்தம் 2,655 வேட்பாளர்கள் போட்டி
கர்நாடக சட்டசபைத் தேர்தல் வரும் 12ஆம் தேதி நடைபெறவுள்ளது. அதைத்தொடர்ந்து 15ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை
நடைபெறுகிறது. இந்நிலையில் கர்நாடகாவில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை மாநிலத் தேர்தல் ஆணையம்
வெளியிட்டுள்ளது. அதன்படி கர்நாடகாவில் மொத்தம் 2,655 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதில் 2,436 பேர் ஆண்கள் மற்றும் 219
பேர் பெண்கள். மொத்தமுள்ள 224 தொகுதிக்ளில் ஆளும் கட்சியான கட்சியான காங்கிரஸ் அனைத்து தொகுதிகளிலும் வேட்பாளர்களை
நிறுத்தியுள்ளது. ஆனால் இரண்டு தொகுதி வேட்பாளர்கள் மனு நிராகரிக்கப்பட்டது. பாஜக 224 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது.
முதலமைச்சர் சித்தராமையா சாமுண்டீஸ்வரி, பாதாமி ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார். முன்னாள் முதலமைச்சர்
எடியூரப்பா 2 தொகுதிகளில் போட்டியிடுகிறார்.
இதுதவிர மஜத 201 இடங்களிலும், பகுஜன் சமாஜ் கட்சி 22 இடங்களிலும் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. அங்கீகரிக்கப்படாத
கட்சிகளின் சார்பில் 800 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். சுயேட்சையாக 1,155 பேர் போட்டியிடுகின்றனர். முலபகிலு தொகுதியில்
அதிகபட்சமாக 61 வேட்பாளர்களும், செல்லக்கரே தொகுதியில் குறைந்தபட்சமாக 4 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர். 271
வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. 583 வேட்பாளர்கள் வேட்புமனுவை வாபஸ் பெற்றுள்ளனர். அதிகபட்சமாக முலபகிலு
தொகுதியில் 17 பேர் வாபஸ் பெற்றுள்ளனர். கடந்த 2013ஆம் ஆண்டு தேர்தலின் போது மொத்தம் 2,948 வேட்பாளர்கள் போட்டியிட்டது
குறிப்பிடத்தக்கது.