அற்றுப் போனதா மனிதநேயம் - ஃபேஸ்புக் லைவ்வில் இளைஞர் தற்கொலை

அற்றுப் போனதா மனிதநேயம் - ஃபேஸ்புக் லைவ்வில் இளைஞர் தற்கொலை

அற்றுப் போனதா மனிதநேயம் - ஃபேஸ்புக் லைவ்வில் இளைஞர் தற்கொலை
Published on

ஹரியானா மாநிலத்தில் இளைஞர் ஒருவர் குடும்பத் தகராறில் பேஸ்புக் நேரலையில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கூர்கான் அருகே பட்டாவுடி பகுதியைச் சேர்ந்தவர் அமித் சவுஹான். இவருக்கு கடந்த சில ஆண்டுகள் முன் ப்ரீத்தி என்பவருடன் திருமணம் ஆனது. இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்தது. திங்கட்கிழமை மாலையும் அதேபோல் இருவருக்கும் இடையே குடும்ப பிரச்னை காரணமாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, வாக்குவாதத்தை தவிர்க்க மனைவி ப்ரீத்தி, பக்கத்து வீட்டிற்குச் சென்றிருந்தார். 

குழந்தைகளுடன் பக்கத்துவீட்டிற்கு சென்றிருந்த ப்ரீத்தி மீண்டும் சிறிதுநேரம் கழித்து வீடு திரும்பினார். வீட்டிற்குத் திரும்பி வந்து பார்த்தால் அவருடைய கணவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தற்கொலை செய்து கொண்ட கணவர் அமித் சவுஹான், தற்கொலை செய்வதற்கு முன்பு அதனை ஃபேஸ்புக்கில் லைவ் செய்துள்ளார். மனைவி வீட்டிற்கு வந்து கதவை திறக்கும் வரை போனில் ஃபேஸ்புக் லைவ் 2 மணி நேரமாக ஆனில் இருந்துள்ளது. டைம்ஸ் ஆஃப் இந்தியா இது தொடர்பாக விரிவான செய்தி வெளியிட்டுள்ளது. 

தற்கொலைக்கு முன்பான நிமிடங்கள்...

  • மாலை 6.30 மணி - குடும்ப விவகாரம் தொடர்பாக அமித் மற்றும் அவரது மனைவி ப்ரீத்தி இடையே கடுமையான சண்டை ஏற்பட்டுள்ளது.
  • 6.40 மணி - தனது இரண்டு குழந்தைகளுடன் ப்ரீத்தி பக்கத்து வீட்டிற்கு சென்றுவிட்டார்.
  • 7.10 மணி - அமித் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அவரது பெற்றோர்களும் வெளியே சென்றுவிட்டனர். தனது மொபைல் மூலம்  ஃபேக் புக்கில் லைவ் செய்துள்ளார். 
  • 7.28 மணி - முதல் தளத்தில் உள்ள தனது அறைக்கு அமித் சென்றுள்ளார்
  • 7.30 மணி - சீலிங் பேனில் துப்பட்டாவை கட்டியுள்ளார்
  • 7.35 மணி - துப்பட்டாவில் தூக்கிட்டு அமித் தற்கொலை செய்து கொண்டார்
  • 9.30 மணி - மனைவி ப்ரீத்தி வீட்டிற்கு திரும்பி வந்துள்ளார். கணவர் தூக்கிட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அவர் வரும் வரை ஃபேஸ் புக் லைவ்வில் தான் இருந்தது. 

மொத்தம் இரண்டு வீடியோவை அமித் பதிவிட்டுள்ளார். முதல் வீடியோ 2.30 நிமிடங்கள். அதில் தான் தன்னுடைய வீட்டின் தரை தளத்தில் இருந்து முதல் மாடியில் உள்ள அறைக்கு செல்கிறார். துப்பட்டாவை சீலிங் ஃபேனில் கட்டுகிறார். இதன்பிறகு தான் தற்கொலை செய்வதை இரண்டாவது வீடியோவை லைவ் செய்துள்ளார். சுமார் 2,300 பேர் இந்த ஃபேஸ்புக் லைவ் வீடியோவை பார்த்துள்ளனர். ஆனால், ஒருவர் கூட போலீசுக்கோ, குடும்பத்தினருக்கோ தகவல் தெரிவிக்கவில்லை. அப்படி தெரிவித்திருந்தால் தற்கொலையை தடுத்திருக்கலாம். 

இந்தச் சம்பவத்தை தொடர்ந்து அமித்தின் குடும்பத்தார் காவல்நிலையத்துக்கு தகவல் தெரிவிக்காமலேயே மறுநாள் அவரது உடலை தகனம் செய்தனர். தற்கொலை வீடியோவை பார்த்த அமித்தின் நண்பர்கள் மூலம் இந்தச் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. தற்கொலை செய்து கொண்ட அமித்திற்கு 3 மற்றும் 2 வயதில் இரு குழந்தைகள் உள்ளனர். அமித்தின் தற்கொலை தொடர்பாக யாரும் கைது செய்யப்படவில்லை. 

அமித் தற்கொலை குறித்து அவரது தந்தை அசோக் கூறுகையில், “வேலைவாய்ப்பில்லாமல் அமித் வீட்டில் இருந்தார். சாதாரண விஷயங்களுக்கும் கோபப்படுவார். குடும்பத்தில் உள்ளவர்களை போட்டு அடிப்பார். திங்கட்கிழமை அப்படிதான் கோபப்பட்டு சண்டையிட்டார்” என்றார். தற்கொலை தொடர்பாக குடும்பத்தில் உள்ளவர்கள் யாரும் புகார் அளிக்கவில்லை. இருப்பினும், போலீசார் தகவல்களை மட்டும் திரட்டி சென்றனர். 

courtesy - times of india

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com