காஷ்மீரில் பாக். படைகள் தாக்குதல்: 10 வயது சிறுவன் பலி
காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் படைகள் நடத்திய தாக்குதலில் 10 வயது சிறுவன் உயிரிழந்தான்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் பகுதியில் பாகிஸ்தான் படைகள் இன்று காலை அத்துமீறி தாக்குதல் நடத்தின. பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய வீரர்களும் எதிர் தாக்குதல் நடத்தினர். இருதரப்பினருக்கும் இடையே நீண்ட நேரம் துப்பாக்கிச் சண்டை நீடித்தது. பாகிஸ்தான் படைகள் அத்துமீறி நடத்திய தாக்குதலில் 10 வயது சிறுவன் உயிரிழந்துள்ளான். மரணமடைந்த சிறுவன் கார்னி பகுதியை சேர்ந்த இஷார் அகமது (Israr Ahmad) என தெரியவந்துள்ளது. இத்தாக்குதலில் பொதுமக்கள் 5பேர் காயமடைந்தனர்.
இதனிடையே ஜம்மு காஷ்மீரின் கீரன் பகுதி வழியாக ஊடுருவ பயங்கரவாதிகள் முயற்சிப்பதாக கிடைத்த தகவலை அடுத்து அங்கு பாதுகாப்புப் படையினரும், ராணுவத்தினரும் குவிக்கப்பட்டனர். அப்போது நடைபெற்ற சண்டையில் ஒரு பயங்கரவாதியை பாதுகாப்புப் படையினர் சுட்டு வீழ்த்தினர். அங்கு வேறு யாரேனும் பதுங்கியுள்ளார்களா? எனத் தேடும் பணி தொடர்வதாக பாதுகாப்புப் படை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.