மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் அபு சலீமுக்கு ஆயுள்... இருவருக்கு மரண தண்டனை

மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் அபு சலீமுக்கு ஆயுள்... இருவருக்கு மரண தண்டனை
மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் அபு சலீமுக்கு ஆயுள்... இருவருக்கு மரண தண்டனை

மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட அப்துல் ரஷீத்கான் மற்றும் தாஹிர் மெர்ச்சன்ட் ஆகிய இருவருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது. இவ்வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட அபு சலீம் மற்றும் கரிமுல்லாகான் ஆகிய இருவருக்கு ஆயுள் தண்டனையும் மற்றொருவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும் விதித்து மும்பையிலுள்ள பயங்கரவாத தடுப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

2003 ஆம் ஆண்டு மும்பையில் ஒரே நாளில் 12 இடங்களில் குண்டுகள் வெடித்ததில் 257 பேர் கொல்லப்பட்டனர். 800 பேர் காயமடைந்தனர். இதையடுத்து நடைபெற்ற விசாரணையில் 6 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் ஐவருக்கு இன்று தண்டனை அறிவிக்கப்பட்டது. ஒருவர் சிறையிலேயே இறந்துவிட்டார். பிரபல நிழலுக தாதாவான அபு சலீம், குண்டு வெடிப்புக்கான வெடிபொருட்களை குஜராத்திலிருந்து மும்பைக்கு கொண்டு வந்தார் என்பது அவர் மீதான குற்றச்சாட்டாகும். பிறகு போர்ச்சுக்கல் நாட்டிற்கு தப்பிச் சென்ற இவரை பெரும் முயற்சிகளுக்கு பின் மத்திய அரசு இந்தியா அழைத்து வந்தது.

போர்ச்சுக்கல் நாட்டில் 1867 ஆம் ஆண்டே மரண தண்டனை நீக்கப்பட்டுவிட்டது. அதனால் அபு சலீமை ஒப்படைக்கும்போது போர்ச்சுக்கீசிய அரசு, அவருக்கு மரண தண்டனை அளிக்க மாட்டோம் என்று ஒப்பந்தத்தில் கையொப்பம் பெற்றே இந்திய அரசிடம் ஒப்படைத்தது. அதன்படி, குற்றம் நிரூபிக்கப்பட்ட அபு சலீமுக்கு மரண தண்டனையை தவிர்த்து ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com