\
2 ஆண்டுகளாக முதுகுவலி; அறுவை சிகிச்சையில் சிக்கிய துப்பாக்கிக் குண்டு

2 ஆண்டுகளாக முதுகுவலி; அறுவை சிகிச்சையில் சிக்கிய துப்பாக்கிக் குண்டு

2 ஆண்டுகளாக முதுகுவலி; அறுவை சிகிச்சையில் சிக்கிய துப்பாக்கிக் குண்டு
Published on

முதுகுவலி என்று மருத்துவமனை சென்ற பெண்ணின் உடலில் இருந்து துப்பாக்கிக் குண்டை மருத்துவர்கள் அகற்றியுள்ளனர்

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் ஒருவருக்கு கடந்த 2 வருடங்களாக கடுமையான முதுகுவலி இருந்துள்ளது. இதனையடுத்து அவர் ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்குச் சென்று உடல் பரிசோதனை செய்துள்ளார்.

USER

அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு அறுவை சிகிச்சை செய்தனர். அறுவை சிகிச்சை மூலம் பெண்ணின் உடலில் இருந்து துப்பாக்கிக் குண்டை மருத்துவர்கள் அகற்றியுள்ளனர்.

இரண்டு வருடங்களாக உடலில் துப்பாக்கிக்குண்டுடனே அப்பெண் இருந்து வந்துள்ளார். முதுகுவலி அதிகரிக்கவே வேறு வழியின்றி மருத்துவரை அணுகியுள்ளார். ஏன் அவரது உடலில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்தது, அதனை வெளியே சொல்லாமல் அப்பெண் ஏன் மறைத்துவந்தார் உள்ளிட்ட பல கேள்விகளுக்கு உரிய பதில் வேண்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com