\
இறுதி ஊர்வலத்தில் பங்கேற்பு : ஒரே குடும்பத்தை சேர்ந்த 19 பேருக்கு கொரோனா

இறுதி ஊர்வலத்தில் பங்கேற்பு : ஒரே குடும்பத்தை சேர்ந்த 19 பேருக்கு கொரோனா

இறுதி ஊர்வலத்தில் பங்கேற்பு : ஒரே குடும்பத்தை சேர்ந்த 19 பேருக்கு கொரோனா
Published on

இறுதி ஊர்வலத்தில் பங்கேற்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த 19 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

தெலங்கானாவின் ஷகீராபாத்தை சேர்ந்த 55 வயது பெண்மணி ஒருவர் ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற போது உயிரிழந்தார். அவரது உடலை ஷகீராபாத் கொண்டு வந்த உறவினர்கள், அன்றைய தினமே இறுதி சடங்கு செய்து அடக்கம் செய்தனர். அப்பெண் இறப்பதற்கு முன்பாக எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனை முடிவுகள் அடுத்தநாள் வெளிவந்தன. அதில் அப்பெண்ணுக்கு கொரோனா வைரஸ் இருந்தது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து சுகாதாரத்துறை மற்றும் நகராட்சி நிர்வாகம், உடனே இறந்த பெண்ணின் உறவினர்களை தனிமை வார்டில் வைத்தனர். அவர்களில் 25 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் 19 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் பெண்கள் மற்றும் குழந்தைகளும் அடங்குவர். இதையடுத்து 19 பேரும் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர். அவர்கள் வீடு இருக்கும் பகுதி தடை செய்யப்பட்ட பகுதியாக மாற்றப்பட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com