\
லாரி கவிழ்ந்து 19 பேர் பலி: 7 பேர் படுகாயம்!

லாரி கவிழ்ந்து 19 பேர் பலி: 7 பேர் படுகாயம்!

லாரி கவிழ்ந்து 19 பேர் பலி: 7 பேர் படுகாயம்!
Published on

சிமென்ட் மூட்டைகளை ஏற்றிச்சென்ற லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 19 பேர் பலியாகினர். 7 பேர் படுகாயமடைந்தனர்.

குஜராத் மாநிலம் பாவ்நகர்- அகமதாபாத் நெடுஞ்சாலையில் உள்ள பாவல்யாலி என்ற கிராமத்தின் அருகே சிமென்ட் மூட்டைகளை ஏற்றிச் சென்ற லாரி, நடு ரோட்டில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், 19 பேர் உடல் நசுங்கி பலியாயினர். மேலும், 7 பேர்  காயம் அடைந்தனர்.

காயம் அடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். லாரியில் இருந்த நூற்றுக்கணக்கான சிமென்ட் மூட்டைகள் சாலையோரம் குவிந்துள்ளன. இந்த விபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இந்த விபத்து பற்றிய மேலதிகத் தகவல்கள் உடனடியாக கிடைக்கவில்லை.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com