வணிக சிலிண்டர் விலை குறைப்பு!

கடைகளில் பயன்படுத்தப்படும் 19 கிலோ எடை கொண்ட வர்த்தக சிலிண்டர்களின் விலை ரூ.30.50 காசுகள் குறைக்கப்பட்டுள்ளது.
 வணிக சிலிண்டர்
வணிக சிலிண்டர்pt

சர்வதேச கச்சா எண்ணெய் விலை நிலவரத்தின் அடிப்படையில் வணிக பயன்பாடு சமையல் எரிவாயு சிலிண்டர்கள் , வீட்டு உபயோக சிலிண்டர்களின் விலை ஒவ்வொரு மாதமும் முதல் நாளில் நிர்ணயிக்கப்படுகிறது.

இதனடிப்படையில், கடைகளில் பயன்படுத்தப்படும் 19 கிலோ எடை கொண்ட வர்த்தக சிலிண்டர்களின் விலை ரூ.30.50 காசுகள் இன்று குறைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் சென்னையில் வணிக சிலிண்டர் விலை தற்போது ரூ.1,930 க்கு விற்பனைக்கு உள்ளது.

 வணிக சிலிண்டர்
டெல்லி: “EVM, மேட்ச் ஃபிக்சிங் இல்லையெனில் பாஜக 180 இடங்களில் கூட வெல்லாது” - ராகுல் காந்தி

கடந்த 3 மாதங்களில் வணிக சிலிண்டரின் விலை ரூ.36 அதிகரித்திருந்த நிலையில், இன்று ரூ.30.50 குறைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதேநேரம் வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் மாற்றமில்லாமல் ரூ.818.50 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

முன்னதாக வீட்டு உபயோக சிலிண்டர் விலையை 100 ரூபாய் குறைப்பதாக தேர்தல் வாக்குறுதி தந்திருந்தார் பிரதமர் மோடி. தெரிவித்திருந்தார். இந்நிலையில் வணிக சிலிண்டர்களின் விலை ரூ 30 குறைக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com