சிஜெபி பேரணியில் வெடித்த வன்முறை.. 118 காவல்துறையினர், 60 போராட்டக்காரர்கள் காயம்!
டெல்லி ஜந்தர் மந்தரில் நீட் தேர்வு முறைகேடு எதிர்ப்பு பேரணி வன்முறையாக மாறி, காக்ரோச் ஜனதா கட்சி ஆதரவாளர்கள் தடையை மீறி கல்வீச்சு, தடுப்பு உடைப்பு செய்ததால் 118 காவல்துறை அதிகாரிகள், பணியாளர்கள் காயமடைந்தனர். பின்னர் போலீஸார் தடியடி நடத்தியதில் 60 போராட்டக்காரர்கள் காயம், 15க்கும் மேற்பட்ட அரசு வாகனங்கள் சேதம், 70 பேர் கைது செய்யப்பட்டனர்.
நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக டெல்லி ஜந்தர் மந்தரில் காக்ரோச் ஜனதா கட்சி நடத்திய பேரணி வன்முறையாக மாறியது. தடையை மீறி முன்னேறிய போராட்டக்காரர்கள் கல்வீச்சில் ஈடுபட்டதோடு தடுப்புகளை உடைக்க முயன்றனர். இதில் 118 காவல்துறை அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் காயமடைந்தனர்.
தொடர்ந்து போலீஸார் நடத்திய தடியடியில் சுமார் 60 போராட்டக்காரர்கள் காயமடைந்தனர். மேலும் 15க்கும் மேற்பட்ட அரசு வாகனங்கள் சேதப்படுத்தப்பட்ட நிலையில், வன்முறையில் ஈடுபட்ட 70 பேரை டெல்லி போலீசார் கைது செய்தனர்.

