இந்தியா
‘ஜூன் 19 இல் 18 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல்’ : தேர்தல் ஆணையம்
‘ஜூன் 19 இல் 18 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல்’ : தேர்தல் ஆணையம்
18 மாநிலங்களவை உறுப்பினர்களைத் தேர்வு செய்ய ஜூன் 19ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என இந்தியத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
பல்வேறு மாநிலங்களில் காலியாக உள்ள மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான இடங்களைப் பூர்த்தி செய்யத் தேர்தல் தேதியைத் தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி, ஆந்திராவில் 4 எம்பிக்கள், குஜராத்தில் 4 எம்பிக்கள், ஜார்கண்ட் 2 எம்பிக்கள், மத்தியப் பிரதேசத்தில் 3 எம்பிக்கள், மணிப்பூர் மற்றும் மேகாலயா தலா ஒரு எம்பி எனத் தேர்வு செய்யப்படவுள்ளனர்.
இதற்கான தேர்தல் வரும் ஜூன் 18ஆம் தேதி நடைபெறும் என்றும், காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை தேர்தல் நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தேர்தல் நடைபெறும் அன்றைய தினம் மாலை 5 மணிக்கே முடிவுகள் அறிவிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.