இந்தியா
ராஜஸ்தானை அச்சுறுத்தி வரும் ஜிகா வைரஸ் - 50 பேருக்கு பாதிப்பு
ராஜஸ்தானை அச்சுறுத்தி வரும் ஜிகா வைரஸ் - 50 பேருக்கு பாதிப்பு
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூர் மாவட்டத்தில் 50 பேருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.
கொசுக்கடி மூலம் பரவும் ஜிகா வைரஸ், ராஜஸ்தான் மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. ஜிகா வைரஸ் பாதிப்பு அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளோருக்கு பரிசோதனைகள் செய்யப்பட்டன. அவர்களில் இதுவரை 50 பேருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனையடுத்து வைரஸ் பரவலை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. ஜிகா வைரஸ் பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க சிறப்பு தனி வார்டு உருவாக்கப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் 170 குழுக்கள் அமைக்கப்பட்டு ஜிகா வைரஸ் பரவல் தீவிரவமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.