18 நாய்கள் விஷம் வைத்து கொலை - தெருநாய் தொல்லையில் இருந்து தப்ப தவறான முடிவு

18 நாய்கள் விஷம் வைத்து கொலை - தெருநாய் தொல்லையில் இருந்து தப்ப தவறான முடிவு
18 நாய்கள் விஷம் வைத்து கொலை - தெருநாய் தொல்லையில் இருந்து தப்ப தவறான முடிவு

ஆந்திராவில் 18 தெரு நாய்களை விஷம் வைத்து கொன்றவர் மீது விலங்குகள் வதை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆந்திர மாநிலம் எலுரு மாவட்டத்தில் கடந்த சனிக்கிழமை அன்று 18 தெரு நாய்கள் விஷம் வைத்து கொல்லப்பட்டன. இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு விலங்குகள் நல ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில்,  நாய்களை விஷம் வைத்து கொன்றது செப்ரோல் கிராமத்தைச் சேர்ந்த வீரபாபு என்பது கண்டறியப்பட்டது. அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், செப்ரோல் கிராமத்தின் தலைவர் மற்றும் செயலர் ஆகியோர்தான் நாய்களை விஷ ஊசி போட்டு கொல்ல சொன்னதாக கூறினார். இதையடுத்து வீரபாபு மீது போலீசார் விலங்குகள் வதை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

சில மாதங்களுக்கு முன்பு தெலுங்கானா மாநிலம் சித்திபேட் மாவட்டத்தில் 100க்கும் மேற்பட்ட நாய்கள் விஷ ஊசிப்போட்டு எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் தெரு நாய்களின் தொல்லை தீராத பிரச்சினையாக உள்ளது. நாய்க்கடி, நாய்களின் அச்சுறுத்தல் ஆகியவற்றால் பாதிக்கப்படும் மக்கள் அவற்றை கொல்லும் விரக்திக்கு தள்ளப்படுகின்றனர். ஆனால் நாய்களைக் கொல்வது எந்த வகையிலும் தீர்வாகாது எனக்கூறும் விலங்குகள்நல ஆர்வலர்கள், தெரு நாய்களுக்கு தடுப்பூசி போடுவது, கருத்தடை செய்வது ஆகியவற்றின் அவசியத்தை எடுத்துரைக்கின்றனர்.

இதையும் படிக்கலாம்: இந்தியாவில் தொடரும் பிட் புல் நாய் தாக்குதல்! பெண் ஒருவருக்கு தலை, கை, கால்களில் 50 தையல்!


Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com