இவ்ளோ நீள முடியா....? கின்னஸ் சாதனை படைத்த இளம்பெண்...!

இவ்ளோ நீள முடியா....? கின்னஸ் சாதனை படைத்த இளம்பெண்...!

இவ்ளோ நீள முடியா....? கின்னஸ் சாதனை படைத்த இளம்பெண்...!
Published on


ஒரு பெண் முடி வளர்ப்பதையும், அதனைப் பராமரிப்பதையும் தன்வாழ்வின் பிரதான இலக்காகக் கொண்டு உலகச்சாதனை படைத்திருக்கிறார். யார் அவர்? என்ன சாதனை படைத்திருக்கிறார் என்று கேட்கிறீர்களா?

 குஜராத்தைச் சேர்ந்த 18 வயது நிலன்ஷி படேல். கடந்த 2018 ஆம் ஆண்டு இத்தாலின் தொலைக்காட்சி நிகழ்ச்சியான தி நைட் ஆப் ரெக்கார்ட்ஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவருக்கு 170.5 செமீ ( 5 அடி 7 அங்குலங்கள்) முடி வளர்த்தற்காக பரிசு கொடுக்கப்பட்டது. தற்போது அந்தச் சாதனையை அவரே முறியடித்து, முடியின் நீளத்தை 2 மீட்டருக்கு வளர்த்து இளம்பருவத்தில் மிகநீள முடியை வளர்த்தமைக்காக கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார்.

சிறு வயதில் சிகையலங்காரம் செய்யச் சென்ற நிலன்ஷி படேலுக்கு ஏற்பட்ட மோசமான அனுபவமே அவர் இன்று இந்தச் சாதனையை படைப்பதற்கான பிரதான காரணமாம். இது குறித்து அவர் கூறும் போது சிறு வயதில் நான் முடிவெட்டச் சென்றேன். அது மிகமோசமாக அமைந்து விட்டது. அன்றிலிருந்து நான் இனி முடி வெட்டப்போவதில்லை என்ற தீர்மானத்தை கையில் எடுத்தேன். போட்டியில் கலந்து கொண்ட பிரபலமாக நான் இதைச் செய்யவில்லை என்றார்.

முடி வளர்ப்பு ரீதியான சாதனையை நீங்கள் நிகழ்த்த விரும்பினால், கின்னஸ் குழு உங்கள் முடி ஈரமாக இருக்கும் போது அளவீடு செய்யும். ஒரு தரையில் முடியைக் கிடத்தும் அவர்கள், அதன் நீளத்தை அளவீடு செய்வார்கள். அதில் உங்கள் முடியின் நீளம் துல்லியமாக கணக்கீடு செய்யப்படும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com