\
’ப்ளூவேல்’ மிரட்டல்களால் விபரீத முடிவு எடுக்கும் சிறுவர்கள்

’ப்ளூவேல்’ மிரட்டல்களால் விபரீத முடிவு எடுக்கும் சிறுவர்கள்

’ப்ளூவேல்’ மிரட்டல்களால் விபரீத முடிவு எடுக்கும் சிறுவர்கள்
Published on

ப்ளூவேல் விளையாட்டில் ஈடுபட்டிருந்த இரண்டு பேர் தற்கொலைக்கு முயன்றதை அடுத்து அவர்கள் ஆபத்தான கட்டத்தில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

ஜோத்பூரை சேர்ந்த 17வயது மாணவி ஒருவர், ஏரியில் குதித்து தன்னுரை மாய்த்துக்கொள்ள முயன்றுள்ளார். அதிர்ஷடவசமாக காப்பற்றப்பட்ட அந்த மாணவி, தான் தற்கொலை செய்யவில்லை என்றால் தனது தயாரின் உயிருக்கு ஆபத்து உள்ளதாக வந்த மிரட்டல்களை அடுத்தே, தான் இந்த முடிவை எடுத்ததாக தெரிவித்தார். இதேபோல், பஞ்சாப் மாநிலம் பதான்கோட்டில் 16 வயது மாணவன் ஒருவன், தூக்கில் துங்கி தற்கொலைக்கு முயன்றுள்ளான். அதனை பார்த்த அவனது பெற்றோர்கள் உடனடியாக மீட்டு ‌மருத்துவமனையில் அனுமதித்தனர். தற்கொலை செய்யவில்லை என்றால் பெற்றோரை கொலை செய்துவிடுவோம் என மிரட்டல் விடுக்கப்பட்டதால் தான் வேறுவழியின்றி இந்த முடிவை நோக்கி தான் தள்ளப்பட்டுள்ளதாக அந்த மாணவன் கூறியிருக்கிறான்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com