“நான் இன்று பாலியல் வன்கொடுமைக்கு ஆளானேன்” - சிறுவனுக்கு நேர்ந்த கொடூரம்
ஆண்கள் இருவர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டதாகவும், அது தன்னை மிகுந்த மனவருத்தத்திற்கு ஆளாக்கிவிட்டதாகவும் சிறுவன் ஒருவன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் பிகானர் நகரை சேர்ந்த பள்ளிச் சிறுவன் தன்னுடைய ட்விட்டரில் அதிர்ச்சிகரமான ஒரு விஷயத்தை பதிவிட்டிருந்தார். பொது கழிவறைக்குள் சென்ற தனக்கு நேர்ந்த கொடூரத்தை அவன் ட்விட்டரில் விரிவாக குழந்தை தனத்துடன் கூறியிருந்தார். ட்விட்டரில், ‘நான் எனது பள்ளிக்கு செல்லும் வழியில் உள்ள பொதுக்கழிவறை ஒன்றிற்குள் சென்றேன். அங்கு இரண்டு ஆண்கள் என்னை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டனர்.
அந்த கழிவறைக்குள் இருந்தவர்கள் கூட வேடிக்கை பார்த்தார்களே தவிர எதுவும் கேட்கவில்லை. அங்கு நடந்தவற்றை எல்லாம் மறக்க வேண்டும் என்றுதான் நினைக்கிறேன். ஆனால், என் மனதில் அது வந்து வந்து செல்கிறது. இதனால் நான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன்.
இதுதொடர்பாக எனது தாய், தந்தையிடம் கூறி, படிப்பறிவு இல்லாத அவர்களை மன வருத்தம் அடையச் செய்ய நான் விரும்பவில்லை. அதேசமயம் எனது சொந்த நகரம் ஆண்களுக்கு கூட பாதுகாப்பில்லாத இடமாக மாறிவிட்டது என்பதை என்று நான் புரிந்துகொண்டேன். இந்த சம்பவத்திற்கு நான் என்ன எதிர்வினை ஆற்றுவது எனக்கூட எனக்கு தெரியவில்லை” என்று மிகுந்த வருத்தத்துடன் கூறியுள்ளார். அவரது இந்த நிலைக்கு பலரும் ஆறுதல் கூறிவருகின்றனர். அத்துடன், இந்த மனநிலையில் இருந்து மீண்டுவர உதவ தயாராக இருப்பதாக சிறுவனது ட்விட்டர் பதிவிற்கு பலரும் கமெண்ட் செய்துள்ளனர்.