\
டெல்லியில் கடும் பனிமூட்டம்: 17 ரயில்கள் ரத்து

டெல்லியில் கடும் பனிமூட்டம்: 17 ரயில்கள் ரத்து

டெல்லியில் கடும் பனிமூட்டம்: 17 ரயில்கள் ரத்து
Published on

டெல்லியில் அதிகாலை நேரத்தில் பனிமூட்டம் நீடிப்பதால் 17 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

வடமாநிலங்களில் கடந்த சில நாட்களாகவே கடும் பனிமூட்டம் நிலவி வருகிறது. டெல்லி, உத்தரப் பிரதேசம், பஞ்சாப், மத்தியப் பிரதேசம் ஆகிய வடமாநிலங்களில் நிலவும் கடும் பனிமூட்டத்தினால் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று ஏற்பட்ட பனிமூட்டம் காரணமாக டெல்லியில் 17 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் டெல்லி வரவேண்டிய மற்றும் அங்கிருந்து புறப்பட்ட 26 ரயில்கள் பலமணிநேரம் தாமதமாக இயக்கப்பட்டு வருகின்றன. பனிமூட்டம் காரணமாக போதிய வெளிச்சம் இல்லாததால் 6 ரயில்களின் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

இதுமட்டுமில்லாமல் பனிமூட்டம் காரணமாக சாலைகளில் இருசக்கர வாகனங்களில் செல்வோரும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். பனிமூட்டம் காரணமாக எதிர் வருபவர்கள் சரியாக தெரியாத காரணத்தினால் அவர்கள் மிகுந்த இன்னலுக்கு ஆளாகினர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com