பாலை உட்கொண்ட பள்ளி மாணவர்களுக்கு வாந்தி; மயக்கம்

பாலை உட்கொண்ட பள்ளி மாணவர்களுக்கு வாந்தி; மயக்கம்

பாலை உட்கொண்ட பள்ளி மாணவர்களுக்கு வாந்தி; மயக்கம்
Published on

மதிய உணவின் போது பால் உட்கொண்ட 17 மாணவர்கள் அஜ்மீரில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.


அஜ்மீரில் உள்ள ஒரு அரசுப் பள்ளியின் பதினேழு மாணவர்களுக்கு நேற்று மதிய உணவு பரிமாறப்பட்டது. அதனுடன் பாலும் வழங்கப்பட்டது. அதனை உட்கொண்ட மாணவர்களுக்கு குமட்டல், வயிற்றுப்போக்கு, வாந்தி மற்றும் வயிற்றுக் கடுப்பு போன்ற உபாதைகள் ஏற்பட்டன. அதனைத் தொடர்ந்து புகார் எழுந்தது. ஆகவே அர்ஜுன் பூரா கல்சா பள்ளி மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துடன் பேசிய தலைமை மருத்துவ சுகாதார அதிகாரி கே.கே.சேனி, “பதினேழு குழந்தைகள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். ஆனால் அவர்களின் உடல்நிலை இப்போது சீராக உள்ளது. அவர்கள் உட்கொண்ட உணவு மாதிரிகளை எடுக்க உணவு பாதுகாப்பு அதிகாரி அனுப்பப்பட்டுள்ளார். இப்பள்ளியில் மொத்தம் 80 மாணவர்கள் படித்து வருகின்றனர். அதில் 17 மாணவர்கள் உபாதை உண்டாகி இருக்கிறது. மேலும் இது குறித்து விசாரணை நடந்து வருகிறது” எனக் கூறியுள்ளார்.

இந்நிலையில் அர்ஜுன் பூரா கிராமத் தலைவர் சக்தி ராவத் இது குறித்துப் பேசுகையில், அலட்சியமாக நடந்து கொண்ட பள்ளி அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியுள்ளார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com