\
டெல்லி தீ விபத்து: உயிரிழந்தோர் எண்ணிக்கை 17 ஆக உயர்வு

டெல்லி தீ விபத்து: உயிரிழந்தோர் எண்ணிக்கை 17 ஆக உயர்வு

டெல்லி தீ விபத்து: உயிரிழந்தோர் எண்ணிக்கை 17 ஆக உயர்வு
Published on

டெல்லி நட்சத்திர ஓட்டலில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது.

மத்திய டெல்லியில் உள்ள கரோல் பாக் பகுதியில் அர்பித் பேலஸ் என்ற நட்சத்திர ஓட்டல் உள்ளது. இந்த ஒட்டலில் இன்று அதிகாலை 4.35 மணிக்கு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

இது குறித்து தகவல் கிடைத்ததும் 22 வண்டிகளில் வந்த தீயணைப்புத்துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தீ விபத்தில் சிக்கி முதலில் 9 பேர் உயிரிழந்ததாகக் கூறப்பட்டது. இப்போது அந்த எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது. ஏராளமானோர் படுகாயம் அடைந்துள்ளனர். 

அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளனர். பலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது. விபத்துக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மீட்பு பணி தொடர்ந்து நடந்து வருகிறது. 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com