\
தடுப்புச் சுவரில் மோதி பேருந்து கவிழ்ந்தது: 17பேர் பலி

தடுப்புச் சுவரில் மோதி பேருந்து கவிழ்ந்தது: 17பேர் பலி

தடுப்புச் சுவரில் மோதி பேருந்து கவிழ்ந்தது: 17பேர் பலி
Published on: 

உத்தரப்பிரதேசத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் 17 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலத்தில் சுமார் 50-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து, மெயின்புரி அருகே வந்தபோது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையின் நடுவே இருந்த தடுப்புச் சுவரில் மோதி குப்புற கவிழ்ந்தது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த பயணிகளில் 17 பேர் உயிரிழந்தனர். 35 பேர் படுகாயம் அடைந்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினரும், கிராம மக்களும், படுகாயம் அடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். விபத்து காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com