\
காமன்வெல்த் செஸ் சாம்பியன்ஷிப்பில் தங்கம் - 16 வயது தமிழக வீரர் அசத்தல்

காமன்வெல்த் செஸ் சாம்பியன்ஷிப்பில் தங்கம் - 16 வயது தமிழக வீரர் அசத்தல்

காமன்வெல்த் செஸ் சாம்பியன்ஷிப்பில் தங்கம் - 16 வயது தமிழக வீரர் அசத்தல்
Published on

டெல்லியில் நடைபெற்ற காமன்வெல்த் செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் தமிழகத்தைச் சேர்ந்த இனியன் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.

ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த இனியன் 18 வயதுக்குட்பட்டோருக்கான பிரிவில் தங்கம் வென்றுள்ளார். இந்தப் பிரிவில் தொடர்ச்சியாக அவர் 7 போட்டிகளில் வென்று பதக்கத்தை உறுதி செய்தார். அவர் மட்டும்தான் இந்தப் பிரிவில் அனைத்துப் போட்டிகளிலும் வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து இனியனின் தந்தை பன்னீர்செல்வம் கூறுகையில், “அவனை நினைத்து பெருமை கொள்கிறேன். இந்தச் சாதனையைப் படைக்க அவன் கடுமையாக உழைத்தான். 5 வயதில் இருக்கும் பொழுதில் இருந்து அவன் விளையாடி வருகிறான். இன்று இந்த இடம் வரை முன்னேறியுள்ளான்” என்று மகிழ்ச்சியாக தெரிவித்தார்.

மேலும், ஈரோ செஸ் அசோஷியேசன் உறுப்பினர் தினேஷ் பாபு கூறுகையில், “இது உண்மையில் சிறிய சாதனை அல்ல. இனியன் தங்கம் வென்றதை நினைத்து பெருமை கொள்கிறேன். மிகவும் உணர்ச்சி மிக்க திறன் கொண்டவர்” என்றார். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com