கூட்டுப் பாலியல் வன்கொடுமை: 3-வது மாடியில் இருந்து பெண்ணை வீசிய கொடூரம்!

கூட்டுப் பாலியல் வன்கொடுமை: 3-வது மாடியில் இருந்து பெண்ணை வீசிய கொடூரம்!

கூட்டுப் பாலியல் வன்கொடுமை: 3-வது மாடியில் இருந்து பெண்ணை வீசிய கொடூரம்!
Published on

பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து 3 -வது மாடியில் இருந்து தூக்கி வீசியவனை போலீசார் கைது செய்துள்ளனர்.

கான்பூரில் உள்ள கிருஷ்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் சன்னி. இவரது வீட்டுக்கு எதிரில் ஒரு குடும்பம் வாடகைக்கு குடியிருந்தது. அவர்களின் 16 வயது மகளை சன்னி சனிக்கிழமை கடத்தி தனது வீட்டுக்குள் அடைத்தார். 
பின்னர் நண்பர்களுடன் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். கதறி அழுத அந்தப் பெண்ணை, பின்னர் மூன்றாவது மாடியில் இருந்து கீழே வீசியுள்ளனர். அவர் கீழே விழுவதைக் கண்ட அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து அவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசுக்கும் தகவல் தெரிவித்தனர். இந்தக் கொடூர சம்பவத்தை அடுத்து அங்கு கூட்டம் கூடியது. அவர்கள் சன்னியின் வீட்டை கற்களால் தாக்கினார்கள். போலீசார் அவர்களை சமாதானப்படுத்திவிட்டு சன்னியை கைது செய்தனர். அவரின் நண்பர்களைத் தேடி வருகின்றனர்.
மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள அந்தப் பெண்ணின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com