\
பாலியல் வன்கொடுமையை எதிர்த்த மாணவி மீது ஆசிட் வீச்சு

பாலியல் வன்கொடுமையை எதிர்த்த மாணவி மீது ஆசிட் வீச்சு

பாலியல் வன்கொடுமையை எதிர்த்த மாணவி மீது ஆசிட் வீச்சு
Published on

பாலியல் வன்கொடுமையை எதிர்த்து போராடிய 11ம் வகுப்பு மாணவி மீது ஆசிட் வீசிய சம்பவம் பீஹாரில் நடந்துள்ளது.

பீஹார் மாநிலத்தின் பஹல்பூர் மாவட்டத்தில் 11ம் வகுப்பு படிக்கும் மாணவியின் வீட்டுக்குள் 4 இளைஞர்கள் புகுந்துள்ளனர். வீட்டுக்குள் இருந்த மாணவியின் அம்மாவை துப்பாக்கி முனையில் மிரட்டி அமைதியாக இருக்க சொல்லியுள்ளனர். பின்னர் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி செய்துள்ளனர். 

ஆனால் மாணவி அவர்களை எதிர்த்து போராடவே , அவரின் முகத்தில் ஆசிட்டை வீசியுள்ளனர். இந்தச் சம்பவத்தில் படுகாயம் அடைந்த மாணவி அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 

சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த பஹல்பூர் போலீசார் 2 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவத்தில் தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும் கைது செய்யப்படுவார்கள் காவல்துறையினர் உறுதியளித்துள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com