இந்தியா
16 பெண்கள் போலீசாரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக புகார்.. சத்தீஸ்கர் அரசுக்கு நோட்டீஸ்
16 பெண்கள் போலீசாரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக புகார்.. சத்தீஸ்கர் அரசுக்கு நோட்டீஸ்
சத்தீஷ்கர் மாநிலத்தில் 16 பெண்கள் போலீசாரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக கூறி குற்றச்சாட்டு எழுந்த நிலையில், அம்மாநில அரசுக்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
சத்தீஷ்கர் மாநிலத்தில் 16 பெண்கள் போலீசாரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக கூறி கடந்த நவம்பர் மாதம் ஊடகங்களில் செய்தி வெளியானது. இதனையடுத்து மனித உரிமை ஆணையம் இவ்வழக்கை தானே எடுத்து விசாரணை மேற்கொண்டது.
இந்நிலையில், இது தொடர்பாக விளக்கம் அளிக்கக் கோரி அம்மாநில அரசுக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இழப்பீடு வழங்கக் கோரி நாங்கள் ஏன் உத்தரவிடக் கூடாது..? என கேட்டுள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட பெண்களிடம் விரைவில் வாக்குமூலம் பெற்று ஒரு மாதத்திற்குள் அறிக்கையை தாக்கல் செய்யவும் நோட்டீஸில் வலியுறுத்தியுள்ளது.