\
”பொதுவெளியில் இப்படி மது அருந்தாதீர்கள்” இளைஞர்களை தட்டிக்கேட்ட முதியவர் கொடூர கொலை

”பொதுவெளியில் இப்படி மது அருந்தாதீர்கள்” இளைஞர்களை தட்டிக்கேட்ட முதியவர் கொடூர கொலை

”பொதுவெளியில் இப்படி மது அருந்தாதீர்கள்” இளைஞர்களை தட்டிக்கேட்ட முதியவர் கொடூர கொலை
Published on

சத்தீஸ்கர் மாநிலத்தில் தன் வீட்டுக்கு வெளியே மது அருந்திய இளைஞர்களை தட்டிக்கேட்ட முதியவர் கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சத்தீஸ்கர் மாநிலம் பிலாய் மாவட்டம் கிருஷ்ணா நகரைச் சேர்ந்தவர் ராம் சவுகான் வயது 60. இவர் நேற்று இரவு தன் உணவை முடித்துவிட்டு வீட்டுக்கு வேளியே நடைப்பயிற்சி செய்ய புறப்பட்டார். அப்போது துர்கேஷ் சாஹூ, லோகேஷ் சாஹூ என்ற இளைஞர்கள் வீட்டின் வெளியே மது அருந்திக்கொண்டும் புகைப்பிடித்துக்கொண்டும் இருந்துள்ளனர். அப்போது அவர்களிடம் வாக்குவாதம் செய்துள்ளார் ராம் சவுகான்.

இதனால் ஆத்திரமடைந்த இளைஞர்கள் ராம் சவுகானை கடுமையாக தாக்கியுள்ளனர். பின்பு அவரின் வீட்டின் உள்ளே அடைத்து கொடூரமாகி தாக்கி கொலை செய்துள்ளனர். அந்த இளைஞர்கள் ராம் சவுகானை பிளோடாலும், கல்லாலும் கொடூரமாக தாக்கியுள்ளனர். பிரேத பரிசோதனையில் ராம் சவுகானின் உடலில் 150 இடங்களில் வெட்டுக்காயங்கள் இருந்தது தெரிய வந்துள்ளது. மேலும், கல்லால் அவர் தலையை தாக்கியுள்ளனர்.

ராம் சவுகானை தாக்கிய இருவர் மீதும் ஏற்கெனவே குற்ற வழக்குகள் இருப்பதாகவும், ராம் சவுகானின் மகனின் புகாரின் பேரில் இளைஞர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com