15 வயது நாக்பூர் சிறுவனுக்கு ரூ33 லட்சம் சம்பளத்தில் கிடைத்த வேலை- இறுதி நிகழ்ந்த ட்விஸ்ட்

15 வயது நாக்பூர் சிறுவனுக்கு ரூ33 லட்சம் சம்பளத்தில் கிடைத்த வேலை- இறுதி நிகழ்ந்த ட்விஸ்ட்
15 வயது நாக்பூர் சிறுவனுக்கு ரூ33 லட்சம் சம்பளத்தில் கிடைத்த வேலை- இறுதி நிகழ்ந்த ட்விஸ்ட்

நாக்பூரை சேர்ந்த 15 வயது சிறுவனுக்கு அமெரிக்க நிறுவனம் ஒன்று ஆண்டுக்கு ரூ.33 லட்சம் சம்பளத்தில் வேலை வழங்கியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரை சேர்ந்த 15 வயதான வேதாந்த் டியோகேட் என்ற சிறுவன் இணையதள வடிவமைப்பில் தொடர்பான பயிற்சிகளை கற்றுத் தேர்ந்தவராக இருந்து வந்துள்ளார். இந்நிலையில் வேதாந்த் டியோகேட் ஒருநாள் இன்ஸ்டாகிராமில் இணையதள வடிவமைப்பு போட்டிக்கான விளம்பரத்தை பாத்துள்ளார். இந்த வெப்சைட் டெவலப்மென்ட் போட்டியில் நுழைய முடிவு செய்து, 2,000க்கும் மேற்பட்ட வரி கம்பியூட்டர் கோடுகளை எழுதி, இரண்டு நாட்களில் தனது பணியை முடித்தார்.

இதையடுத்து இந்த போட்டியில் வெற்றி பெற்ற வேதாந்த் டியோகேட்க்கு அமெரிக்காவில் இயங்கிவரும் பெரிய நிறுவனம் ஒன்று மனிதவள மேம்பாட்டுக் குழுவில் ஆண்டுக்கு ரூ.33 லட்சம் சம்பளத்தில் ஒரு பணியை வழங்கியது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக, வேதாந்திற்கு 15 வயதுதான் ஆகியுள்ளது என்பதை கண்டறிந்த அந்நிறுவனம் அந்த வேலைவாய்ப்பை திரும்பப் பெற்றது. இருப்பினும், அந்நிறுவனம் வேதாந்திடம் ஏமாற்றமடைய வேண்டாம் என்றும், அவர் தனது பள்ளிக் கல்வியை முடித்த பிறகு நிறுவனத்தை மீண்டும் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளது.

இதையும் படிக்கலாம்: தேசியக் கொடி விதிகளில் மத்திய அரசு செய்த முக்கிய திருத்தங்கள்! என்ன அவை?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com